தேங்காய் பாயாசம்
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – 3/4 கப்
பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 1
முந்திரி – 8-10
காய்ச்சி குளிர வைத்த பால் – 1/4 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: முதலில் பச்சரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி,
அதில் வெல்லத்தைப் போட்டு வைத்து, வெல்லம் கரைந்ததும்,
அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு அடுப்பில் உள்ள பச்சரிசி கலவையானது ஓரளவு கெட்டியாக கஞ்சி போன்று வரும் போது
, அதில் வெல்லப் பாகுவை ஊற்றி,
பின் அதில் ஏலக்காயை நன்கு தட்டிப் போட்டு கிளறி, கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் நெய் ஊற்றி காய்ந்ததும்,
முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்துடன் ஊற்றி கிளறி, 5 நிமிடம் கழித்து அதில் பாலை ஊற்றி கிளறினால், தேங்காய் பாயாசம் ரெடி!!!
coconut Payasam indian dish , coconut Payasam tamilnadu dishes , coconut Payasam sweet cooking , coconut Payasam mirchi dishes , coconut Payasam breakfast dishescoconut Payasam lunch dishes , coconut Payasam dinner dishes ,coconut Payasam cooking youtube videos ,coconut Payasamcooking in tamilcoconut Payasam cook in tamil , How to cook coconut Payasam youtube videos ,how to preparecoconut Payasam description ,coconut Payasam Preparation onlinecoconut Payasam indian recipe ,coconut Payasam chetttindad dishes ,coconut Payasam nothindian food ,coconut Payasam south indian dishes ,
தேங்காய் பாயாசம் | Easy Way To Prepare Coconut Payasam
Views:
Category:

0 comments:
Post a Comment